சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல்
பதிவு செய்த நாள்
06அக்2017
12:53
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்தது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் கணவர், நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரை பார்க்க, பரோல் கேட்டு, சிறை அதிகாரிகளிடம், சசிகலா விண்ணப்பித்தார்.
முதலில், 'முறையான ஆவணங்கள் இல்லை' என, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக, உரிய ஆவணங்களுடன் மனு செய்தார். அதைத் தொடர்ந்து, கர்நாடக சிறை துறையினர், தமிழக காவல் துறையினரிடம், 'பரோல் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா' என, கேட்டனர். தமிழக காவல் துறை சார்பில், 'ஆட்சேபனையில்லை' என, தெரிவிக்கப்பட்டதுடன் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இது குறித்தும் உயர் அதிகாரிகளுடன் சிறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் சிறை நிர்வாகம் வழங்கியது. பரோல் கிடைத்ததால், இன்று மாலை அவர் சென்னை வர உள்ளார்.
No comments:
Post a Comment