80 வயதை தாண்டிய ஓய்வூதியர்கள் வயது ஆவணமாக ஆதார் சமர்ப்பிக்கலாம்
நெல்லை: தமிழகத்தில் 80 வயதை தாண்டிய ஓய்வூதியர்கள் வயது ஆவணமாக ஆதார் சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியத்திற்கும் வயதை கணக்கிட ஆதார் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. காஸ் இணைப்பு, வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவர் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவி பெறுவதை தடுக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஒருவரது கண் கருவிழி, விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும் ஆதாரில் போலிகள் நுழைய முடியாது என்பதால் பல்வேறு அரசு அலுவல்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 80 வயதை தாண்டிய ஓய்வூதியர்களுக்கு வயதை கணக்கிட ஆதார் அட்டை சமர்ப்பிக்கலாம் என தமிழக கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கருவூலத் துறை அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், அனைத்து கருவூல அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 80 வயது முடிவடைந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் வயதை உறுதி செய்யும் ஏதேனும் ஒரு ஆவணத்தை சம்பந்தப்பட்ட கருவூலங்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்ய முடியாத நிலையில் கருவூல அலுவலகத்தில் இருந்து ஒரு உயர் அலுவலர், பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய சங்கத்திலிருந்து ஒருவர், மருத்துவப் பணிகள் அலுவலர் ஆகிய மூன்று நபர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும்.
இந்தக் குழுவின் மூலம் ஓய்வூதியர்கள் வழங்கும் ஆவணங்கள் மற்றும் ஓய்வூதியரின் உடற்கூறு அடிப்படையில் வயதை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வயது சான்று ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே இந்தக் குழு அமைத்து வயதை உறுதிப்படுத்த வேண்டிய நிலை இனி எழாது.
இனி வரும் காலங்களில் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு வயதை உறுதி செய்ய அரசாணைகளில் கூறியுள்ள படி, அதாவது மத்திய வருமான வரி அலுவலகத்தால் வாங்கப்படும் பான் கார்டு, பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய எதுவும் இல்லாத நிலையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வயது சான்று ஆவணமாக கருதி கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் படி அனைத்து கருவூல அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 சதவீதம் அதிகரிக்கும்
தமிழக அரசில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 80 வயதை தாண்டினால் அவர்களது வயது மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 20 சதவீதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தான் வயது சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:
Post a Comment