குற்றச்செயல் குறையனும் சாமி...! கிடா வெட்டி விருந்து...!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொள்ளை, திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல் அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போவதால் உயரதிகாரிகளின் கிடுக்கிப்பிடி வேறு உள்ளூர் ேபாலீசாரின் கழுத்தை இறுக்குகிறது.
நிலைமை கைமீறி ெசல்வதை உணர்ந்த பொள்ளாச்சி சரக டிஎஸ்பி மற்றும் இங்குள்ள 3 ஆய்வாளர், கிடா வெட்டி விருந்து போட்டால்தான் இனி எடுபடும் என முடிவு செய்தனர்.அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், ஊர் விழிக்கும் முன்ேப அதிகாலையில் பரிகார பூஜை செய்யப்பட்டு, கிடா வெட்டப்பட்டது. கிடா ரத்தம் காவல்நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தெளிக்கப்பட்டது. சாமி... எங்கள காப்பாத்து சாமி... என சில போலீசார் வேண்டிக்கொண்டனர்.
காவல்நிலையம் அருகேயுள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு, கிடாவை எடுத்துச்சென்று தடல், புடலாக சமையல் ரெடியானது. அன்று மதியம் ருசியாக கிடா விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தில், டி.எஸ்.பி., ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள், மற்றும் போலீசார் மட்டுமின்றி ஊர்க்காவல் படையினர், போலீஸ் உளவாளிகள் மற்றும் நலன் விரும்பிகள் பங்கேற்றனர். கிடா வெட்டி பூஜை செய்த பிறகும் 3 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. சார்... என்ன சார் செய்வது... என கீழ்நிலை காவலர்கள், ஆய்வாளரிடம் கேட்க, அவர், அட வுடுய்யா... அதான் கிடா விருந்து சாப்டாச்ல்ல... எல்லாம் குறைஞ்சிடும்... நம்ப பொழப்பையும் பார்க்கனும்ல.... என பதில் அளித்துள்ளார்.
Dailyhunt

No comments:
Post a Comment