Saturday, October 28, 2017

முதியோர் ஓய்வூதிய கணக்குகளில் அபராதம் பிடிக்க வங்கிகளுக்கு தடை
மதுரை: 'முதியோர் மற்றும் விதவையர் ஓய்வூதிய வங்கி கணக்குகளில், குறைந்தபட்ச நிலுவைத் தொகை இல்லை என்பதற்காக, அபராதம் பிடிக்க, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடை, வழக்கறிஞர் லுாயிஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
முதியோருக்கு, 1,000 ரூபாய் ஓய்வூதியம் அரசு வழங்குகிறது. அவர்களுக்கு வங்கிகளில் கணக்கு துவக்கப்பட்டு, அதில் வரவு வைக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' கிளை, 75 வயது மூதாட்டியின் ஓய்வூதிய கணக்கில், குறைந்தபட்ச நிலுவைத் தொகைஇல்லை என்பதற்காக, 350 ரூபாய் அபராதம் வசூலித்தது.
குறைந்தபட்ச நிலுவை தொகை பராமரிக்கப்படவில்லை என்பதற்காக, 388.74 லட்சம் கணக்குகளில் அபராதத் தொகையாக, 235.06 கோடி ரூபாய், மூன்று மாதங்களில், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வசூலித்துள்ளது.கைவிடப்பட்ட முதியோருக்கு உதவும் வகையில், அரசு ஓய்வூதியம் வழங்குகிறது.
இவர்களிடமும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வங்கி கணக்குகளிலும், குறைந்தபட்ச நிலுவைத் தொகை இல்லை என்பதற்காக, அபராதம் வசூலிப்பது நியாயமற்றது. இதற்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
ஓய்வூதிய கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பதற்கு விதிவிலக்கு அளிக்கஉத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி,இந்திரா பானர்ஜி, நீதிபதி, ஜெ.நிஷாபானு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
முதியோர் மற்றும் விதவையரின் ஓய்வூதிய வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்கப்படவில்லை என்பதற்காகஅபராதத் தொகை பிடித்தம்செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி தலைவர், மத்திய நிதித்துறை இணைச் செயலர், மாநில சமூக நலத்துறைசெயலருக்கு நோட்டீஸ்அனுப்பி, வழக்கு, இரண்டு வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...