Saturday, October 28, 2017

வங்கிக் கணக்கில் பணம் எடுக்க அலைக்கழிக்கப்படும் மூதாட்டி..!


By DIN  |   Published on : 28th October 2017 03:44 AM 
காவேரிபாக்கம் அருகே தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல்  மூதாட்டி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
காவேரிபாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (82). இவரது மனைவி இந்திரா ராணி (78). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்றனர். இதனால் வயதான தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். இந்திரா ராணிக்கு காவேரிபாக்கம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தனது கணக்கில் ரூ. 21,101 உள்ளது.
இந்நிலையில், குடும்ப செலவுக்காக தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க கடந்த வாரம் வங்கிக்கு வந்தார். ஆனால் வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் பான் கார்டு இருந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என தெரிவித்ததால், பணம் எடுக்க முடியாமல் திரும்பிச் சென்றார்.
பான் கார்டு என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு வாரமாக வங்கிக்கு வந்து அலைந்துள்ளார். புதன்கிழமை இதைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் அவரை விசாரித்து பான் கார்டுக்கு தேவையான ஆவணங்களை திரட்டி,  அப்பகுதியில் ஒரு கடையில் கொடுத்து அதற்கான செலவையும் அவரே கொடுத்துள்ளார்.
இந்த மூதாட்டியை கவனிக்க ஆள் இல்லாத போதும், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் வங்கியில் பணம் எடுக்க வந்துள்ளார். ஆனால், தனது கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
எனவே வங்கி அதிகாரிகள் இந்த மூதாட்டிக்கு கருணை உள்ளத்தோடு அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...