தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு
By DIN | Published on : 05th October 2017 07:15 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 9 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வரும் 16-ம் தேதி இரவு 9.05-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு வரும் 16-ம் தேதி இரவு 10.30-க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுக்கிறது.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக். 20 மற்றும் 27-ம் தேதிகளில் இரவு 9.05-க்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு அக். 20 மற்றும் 27, நவ.3 மற்றும் 10-ம் தேதிகளில் இரவு 10.30-க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் அக்.19-ம் தேதி இரவு 9.30-க்கும் அக்.22-ம் தேதி இரவு 7 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment