Thursday, October 19, 2017

அதிகாரிகள் அலட்சியத்தால்திருப்பதியில் பக்தர்கள் திண்டாட்டம்
திருப்பதி:ஆர்.டி.சி அதிகாரிகளின் அலட்சியத் தால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திண்டாடி வருகின்றனர்.



திருப்பதி ரயில் நிலையத்திற்கு தினமும் 30 - 40 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை, 60 - 70 ஆயிரம் ஆக உயரும்.திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வர, 4 பாதைகள் உள்ளன.

ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் எதிரே மற்றும் விஷ்ணு நிவாசத்திற்கு செல்லும் மேம்பாலம் அருகே, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளன.ஆனால், ரயில் நிலைய

தலைமை நுழைவு வாயில் அருகே, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக, ஆர்.டி.சி., டிக்கெட் முன்பதிவு மையம் இல்லை.இதனால், இவ் வழியாக வெளியே வரும் பக்தர்கள் திருமலை, திருச்சானுார், சீனிவாசமங்காபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தனியார்வாகனங்களை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தனியார் வாகன ஓட்டிகள், ரயில் நிலைய வாயில் களில் நின்று கொண்டு பயணிகளை ஏமாற்றி, அதிக கட்டணத்தில் தங்கள் வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர்.இதை தடுக்க, ரயில் நிலையம் எதிரே, ஆர்.டி.சி., டிக்கெட் முன்பதிவு மையம் ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் இடம் ஒதுக்கியது. ஆயினும், ஆர்.டி.சி., அதிகாரிகள் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், இப்பகுதியில் இதுவரை முன்பதிவு மையம் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் கடந்த, 3 மாதங்களுக்கு முன் தினமும், 60 - 70 சர்வீஸ்களை இயக்கி வந்த, ஆர்.டி.சி., தற்போது, 10 முதல், 15 சர்வீஸ்களை மட்டுமே இயக்குகிறது. ஆர்.டி.சி.,க்கு அதிக வருமானம் ஈட்டி தருவது,

திருமலைக்கு செல்லும் சர்வீஸ்கள் மட்டுமே. இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் பக்தர்கள் குறைந்த துாரம் உள்ள இடத்திற்கு செல்லவும், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதனால், ஆர்.டி.சி., ரயில்வே அதிகாரிகளின் அலட்சிய போக்கு பக்தர்களுக்கு திண்டாட்ட மாக மாறி உள்ளது. எனவே, உடனடி யாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY