துபாயில் சொத்து வாங்கும் வெளிநாட்டினர் பட்டியலில் முதலிடம் எந்த நாட்டினருக்குத் தெரியுமா?
துபாயில் சொத்து வாங்கும் வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர்.
அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2016 ஜனவரி முதல் 2017 ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் ரூ.42,000 கோடி மதிப்பிலான சொத்துகளை துபாயில் வாங்கியுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் துபாயில்
இந்தியர்கள் வாங்கும் சொத்துகளின் மதிப்பு ரூ.30,000 கோடியாக இருந்தநிலையில், இந்த மதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.12,000 கோடி அதிகரித்து ரூ.42,000 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 40 சதவிகித வளர்ச்சியாகும். அதேபோல், துபாயில் சொத்துகளை வாங்கும் இந்தியர்களில் 33 சதவிகிதம் பேர் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும் வில்லா எனப்படும் தனி வீடுகளை வாங்க 17 சதவிகிதம் பேரும், வணிக வளாகங்கள் மற்றும் நிலம் ஆகியவற்றை வாங்க முறையே 9 மற்றும் 6 சதவிகிதம் பேரும் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய துபாய் பிராப்பரிட்டி ஷோ நிகழ்ச்சியின் மேலாளர் அசங்க சில்வா, ‘சர்வதேச அளவில் குடியிருப்புகள் வாங்குவோரின் விரும்பமான பட்டியலில் துபாய்க்கு எப்போதுமே சிறப்பான இடம் உண்டு. இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்போது அந்தப் பலன்களைச் சொத்துகள் வாங்குவதில் இந்தியர்கள் முதலீடு செய்கின்றனர்’ என்றார்.
No comments:
Post a Comment