தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற விவகாரம்
தினகரன் பேசியது உண்மை:டில்லி போலீஸ் உறுதி
சென்னை, இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர், சுகேஷுடன் நடந்த, அலைபேசி உரையாடல்களில் இருப்பது, தினகரனின் குரல் தான் என்பதை, டில்லி குற்றவியல் போலீசார் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து, தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. அடுத்தடுத்த நெருக்கடியால், தினகரன் ஆதரவு வட்டம், ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக,தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி குற்றவியல்போலீசார், தினகரனை ஏப்., 26ல், கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.பின், நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, வெளியே வந்தார். இவ்வழக்கில், ஹவாலா புரோக்கர், சுகேஷ் சந்திரசேகருடன், தினகரன்,அலைபேசியில் பேசிய உரையாடல் ஆதாரங்களை,மாவட்ட நீதிமன்றத்தில், ஜூன், 22ல், டில்லி போலீசார் தாக்கல் செய்தனர்.
மேலும், தினகரன் குரலை பரிசோதனை செய்ய, அனுமதி கோரி இருந்தனர்; மாவட்ட நீதிபதி, பூனம் சவுத்ரி, ஒப்புதல் அளித்தார். ஆனால், தினகரன் ஒத்துழைப்பு அளிக்க வில்லை.அதைத் தொடர்ந்து, தினகரன், 'டிவி'க்களுக்கு அளித்த பேட்டி குரலை, சுகேஷுடன் பேசியதுடன் ஒப்பிட்டு பார்த்து, அது, தினகரன் குரல் தான் என்பதை, உறுதி செய்துள்ளனர்.
இடைத்தரகர்,சுகேஷ் சந்திரசேகருடன், தினகரன் பேசியது உறுதியாகி உள்ளதால், அவரையும், அவரது நண்பர், மல்லிகார்ஜுனாவையும் சேர்த்து, விரைவில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய, டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.இந்த தகவல் தெரிய வந்ததும், தினகரன் ஆதரவு வட்டம் கடும் அதிர்ச்சிஅடைந்துள்ளது. தேர்தல் கமிஷனில்,
இரட்டை இலை சின்னம் தொடர் பான, இறுதி விசாரணை,வரும்,13ல் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில்,இந்த ஆதாரம் சிக்கி உள்ளதால், தேர்தல் கமிஷன் முடிவு என்னவாக இருக்கும் என்ற கலக்கம், ஒட்டு மொத்த சசி ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், சசிகலாவை சந்திக்க, அமைச்சர்கள் வர மறுப்பு என, அடுத்தடுத்து நெருக்கடிகள் தொடர் வதால், தினகரன் ஆதரவு வட்டம், பலமாக ஆட்டம் காணத் துவங்கி உள்ளது.
No comments:
Post a Comment