Wednesday, October 4, 2017

தமிழக முதல்வரை கண்டுகொள்ளாத திருமலை தேவஸ்தானம்
பாலமுருகன். தெ

vikatan


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமலைக்கு சாமி தரிசனம்செய்ய மனைவியோடு அக்டோபர் 2-ம் தேதி மாலை பத்மாவதி கெஸ்ட்ஹவுசில் தங்கினார். ஒரு மாநிலத்தின் முதல்வர் தரிசனத்துக்கு வருகிறார் என்றால், முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்படும். அப்படி இருக்கும்போது, தமிழகத்தின் முதல்வர் என்றுகூட பார்க்காமல், அவரை தேவஸ்தானத்தின் உயரதிகாரிகள் யாரும் உரிய மரியாதை செய்யாமல், கடைநிலை ஊழியரை விட்டு தரிசன மரியாதை செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.

 விஜய் மல்லையா,டெண்டுல்கர், சினிமா பிரபலங்கள், சேகர்ரெட்டி போன்றவர்கள் எல்லாம் வந்தால், அவர்களை தேவஸ்தானத்தின் உயர் அதிகாரிகளான செயல்அலுவலர் அல்லது துணைச் செயல் அலுவலர் வரவேற்று, தரிசன ஏற்பாடுகள் செய்துகொடுக்கிறார்கள். ஆனால், சாமியை தரிசிக்க வந்த தமிழக முதல்வருக்கு ஜே.இ.ஓ கூட ஆலய மரியாதை வழங்காமல், தேவஸ்தானத்தின் மூன்றாம் நிலை ஊழியரை வைத்து ஆலய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அதிகமான வருமானம் ஈட்டும் திருமலை ஆலயத்தின் உண்டியல் வருமானத்தில் 60 சதவிகிதம், தமிழக பக்தர்களின் காணிக்கை என்று தேவஸ்தானமே சொல்லியிருக்கிறது. இந்நிலையில், தமிழக மக்களின் பிரதிநிதியை தேவஸ்தானம் இவ்வாறு அவமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இதேபோல அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமலைக்கு வந்து தரிசனம் செய்தார். அப்போது அவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024