Wednesday, October 4, 2017

திருப்புவனம் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொகரம் பண்டிகை



திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், ஊர்வலமாக வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அக்டோபர் 02, 2017, 04:15 AM

திருப்புவனம்,

திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்டது முதுவன்திடல். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். அந்த காலக்கட்டத்தில் பாத்திமா நாச்சியார் என்ற பெண் சிறப்பாக வாழ்ந்து வந்தார். பாத்திமா நாச்சியார் இறந்தபின்னர் அவரது நினைவாக முதுவன்திடல் கிராமத்தில் உள்ள மையப்பகுதியில் பள்ளி வாசல் மற்றும் தர்கா அமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிராமமக்கள் பாத்திமா நாச்சியாரை தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இங்கு வசித்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது இந்து மக்களே முதுவன்திடல் கிராமத்தில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இருப்பினும் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் மொகரம் பண்டிகையின்போது பாத்திமா நாச்சியார் நினைவாக 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் போன்றவைகளுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கிராமமக்கள் விவசாயம் செய்து அறுவடை செய்தபின்னர், முதலில் பாத்திமா நாச்சியாருக்கு படையல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்புவனம் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொகரம் பண்டிகை

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024