Wednesday, October 4, 2017

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்


தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 37 லட்சத்து 51 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.

அக்டோபர் 04, 2017, 04:30 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அதிகாரி நூர்முகமது பெற்றுகொண்டார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 54 ஆயிரத்து 276, பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 96 ஆயிரத்து 603, இதர வாக்காளர்கள் 351 என்று மொத்தம் 37 லட்சத்து 51 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:–

சோழிங்கநல்லூர் தொகுதியில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 789 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 10 ஆயிரத்து 542 பெண் வாக்காளர்களும், 74 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 6 லட்சத்து 24 ஆயிரத்து 405 வாக்காளர்கள் உள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக விளங்குகிறது.

ஆலந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 335 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 80 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்களும், 7 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 229 வாக்காளர்கள் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 1 லட்சதது 54 ஆயிரத்து 847 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 62 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்களும், 47 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர்.

பல்லாவரம் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 776 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 403 பெண் வாக்காளர்களும், 25 இதர பாலின வாக்காளர்களும், என்று மொத்தம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 204 வாக்காளர்கள் உள்ளனர்.

தாம்பரம் தொகுதியில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 888 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 96 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்களும், 35 இதர பாலின வாக்காளர்களும், என்று மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 103 வாக்காளர்கள் உள்ளனர்.

செங்கல்பட்டு தொகுதியில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 470 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 95 ஆயிரத்து 923 பெண் வாக்காளர்களும், 43 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்போரூர் தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 664 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 846 பெண் வாக்காளர்களும், 19 இதர பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர்.

செய்யூர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 139 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 94 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலின வாக்காளர்களும், என்று மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர்.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 948 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்கள், 47 இதர பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 610 வாக்காளர்கள் உள்ளனர்.

உத்திரமேரூர் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 836 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்து 782 பெண் வாக்காளர்கள், 14 இதர பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சீபுரம் தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 584 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 54 ஆயிரத்து 372 பெண் வாக்காளர்கள், 11 இதர பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 967 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், சப்–கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களை வரும் 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணிவரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெறப்படும்.

வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள ஏதுவாக முகாம் வரும் 7–ந்தேதி (சனிக்கிழமை), 21–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) பன்னீர்செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொறுப்பு) சா.சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024