தீபாவளிக்கு பிறகு தி.நகரில் நெரிசல் குறைந்தது: கிறிஸ்துமஸுக்கு தயாராகும் வியாபாரிகள்
Published : 20 Oct 2017 08:19 IST
சென்னை
தீபாவளிக்குப் பிறகு தியாகராய நகரில் கூட்ட நெரிசல் நேற்று குறைந்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் உள்ளிட்ட அடுத்த பண்டிகைகளுக்கு இப்போதே வியாபாரிகள் திட்டமிடத் தொடங்கி விட்டனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பே, புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை வாங்க தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தொடர்ந்து 15 நாட்களுக்கு மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தாலும், 15, 16, 17-ம் தேதி தி.நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், கடைசி நாட்களில் பட்டாசு, இனிப்பு வகை பொருட்கள் வாங்கவும் மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், தி.நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகை முடிந்துள்ள நிலையில், கூட்ட நெரி சல் குறைந்து சீராகியுள்ளது.
30 - 40 சதவீத வருவாய்
இதுதொடர்பாக வியாபாரி கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகை உள்ளிட்டவை வாங்க மக்களின் முதல் தேர்வு தி.நகராகத்தான் இருக்கிறது. மற்ற இடங்களை விட கணிசமாக விலை குறைவு, சலுகைகள், அதிக வெரைட்டிகளைப் பார்க்கலாம். ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. சிறிய கடைகளும் அதிக அளவில் இருக்கின்றன.
குறிப்பாக, வழக்கத்தை விட ஜவுளிக் கடைகளில் 200 சதவீத மக்களும் நகைக் கடைகளில் வழக்கத்தை விட 100 சதவீத மக்களும் அதிகளவில் வந்தனர். இதனால், வியாபாரிகளுக்கு 30 முதல் 40 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 15 நாட்கள் வரையில் திருவிழாவைப் போல் இருந்த தி.நகரில் தற் போது கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. அடுத்தது கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் கான உற்பத்தி, கொள்முதல் பணி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய சலுகைகள் அறிவித் தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment