Monday, October 2, 2017

தமிழகத்தில் மழை நீடிக்கும்

By DIN | Published on : 02nd October 2017 04:28 AM |



வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வட கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கேரளம், லட்சத்தீவு, தெற்கு உள் கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக, சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 140 மி.மீ., பதிவாகியுள்ளது. பூண்டி மற்றும் செங்குன்றத்தில் 130 மி.மீ., சோழவரம், தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 100 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பொன்னேரியில் 90 மி.மீ., திருவள்ளூரில் 80 மி.மீ., பூவிருந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரத்தில் தலா 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024