Sunday, October 22, 2017

மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயார்: தேனாண்டாள் நிறுவனம் அறிவிப்பு


By Raghavendran  |   Published on : 21st October 2017 07:15 PM  
ts_mersal_letter


விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது மெர்சல்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆனாலும், இத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின.
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதுபோல, காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டோர் மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
அந்தக் கடிதம் பின்வருமாறு:- 

No comments:

Post a Comment

NEWS TODAY