Tuesday, October 17, 2017


தீபாவளி கங்கா ஸ்நானம்- புனித நீராட நல்ல நேரம்

Posted By: 

Published: Monday, October 16, 2017, 11:28 [IST]

சென்னை: நல்ல எண்ணெயில் லட்சுமி தேவியும், வெந்நீரில் கங்கா தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவேதான் தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா என்று கேட்கின்றனர்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வித, விதமான புத்தாடை அணிந்து, வகை, வகையான இனிப்புகளுடன், பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி 1, 18.10.2017, புதன்கிழமை சதுர்த்தசி. தீபாவளி பண்டிகை. ஐப்பசி 2, 19.10.2017, வியாழக்கிழமையன்று ஸர்வ அமாவாசை. கேதார கெளரி விரதம். லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். ஐப்பசி 3, 20.10.2017, வெள்ளிக்கிழமையன்று பிரதமை கோவர்த்தன பூஜை செய்யலாம். ஐப்பசி 4, 21.10.2017, சனிக்கிழமை யம துவிதியை சகோதரர்களுக்கு விருந்து அளிக்கும் நாள்.





தீபஒளி ஏற்றி வழிபடும் நாள்

தீபாவளி பண்டிகை புதன்கிழமை 18ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது நரகாசுரனுக்கு கிருஷ்ணபகவான் அளித்த வரமாகும். இன்று எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றனர்.




எண்ணெய் குளியல்

தீபாவளியன்று நீராடுவதை "புனித நீராடல்" என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் "சந்திர தரிசனம்" காலத்தில் எல்லா இடங்களிலும், கிடைக்கும் தண்ணீரில் (நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர்நிலைகள்) "கங்கா தேவி" (கங்கை நீர்) வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5மணிவரை உள்ள காலம் (இலங்கை, இந்தியாவில்) எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காலம் என கணிக்கப் பெற்றுள்ளது.




சூரிய உதயத்திற்கு முன் நீராடல்

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று கிழக்கு அடிவானத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக தேய் பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும்.





தெய்வங்களின் தரிசனம்

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும் என்பது ஐதீகம். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள். அத்துடன் அன்று நீராடும் போது அணியும், எண்ணெயில்-லட்சுமியும், அரப்பில்-சரஸ்வதியும், குங்குமத்தில்-கௌரியும், சந்தனத்தில்-பூமாதேவியும், புத்தாடைகளில்-மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.




பட்டாசு வெடிப்பது அவசியம்

தீபாவளி நாளில் நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.

சாஸ்திரங்களை கடைபிடிப்போம்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. அன்றைய தினம் எண்ணெய் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக கூறுகின்றனர். தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...