'மெர்சல்' பற்றி திரையுலக பிரபலங்கள் கூறியுள்ளது என்ன?
Published : 19 Oct 2017 18:30 IST
ஸ்கிரீனன்
அட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இப்படத்தைப் பார்த்துவிட்டு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சிபிராஜ்: உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் நமது தளபதியின் மின்சாரம் போன்ற நடிப்பும் சேர்ந்து மெர்சலை தீபாவளிக்கான சரியான பொழுதுபோக்குப் படமாக மாற்றியுள்ளது
சாந்தனு: கத்தி கூச்சல் போட்டு எனது தொண்டை கெட்டுவிட்டது. அந்த அளவுக்கு எனக்கு மெர்சல் படத்தில் விஜய் அண்ணாவைப் பிடித்திருந்தது. தளபதி கதாபாத்திரத்தைப் பார்க்கும்போது புல்லரித்துவிடது. எஸ்.ஜே.சூர்யா அவர்களே, மெர்சலில் நீங்கள் அற்புதமாக நடித்திருந்தீர்கள். உங்கள் தோற்றமும் நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. ஸ்பைடரிலிருந்து வித்தியாசமாக இருந்தது.
விக்ரம் பிரபு - முழு படத்தையும் ரசித்துப் பார்த்தேன். மெர்சல் குழு, அற்புதமாக உழைத்திருக்கிறீர்கள்.
சக்தி சவுந்தர் ராஜன் - தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு வாழ்த்துகள். மெர்சல் மூலம் மிகப்பெரிய வெற்றிப்படத்தை கையில் வைத்திருக்கிறீர்கள். நல்ல பொழுதுபோக்கு.
சதிஷ் - மெர்சல். அற்புதமான மாஸ் நடிப்பை விஜய் அவர்கள் தந்துள்ளார். வாழ்த்துகள் சார்.
பிரவீன் கே எல் - மெர்சல் படத்தை ரசித்தேன். தீபாவளிக்கான சரியான படம். அற்புதமான கலவை. விஜய் கலக்கியிருக்கிறார். அட்லி அவர்களுக்கு வாழ்த்துகள். ரூபன் படத்தொகுப்பு சிறப்பு.
ஆதவ் கண்ணதாசன் - சொல்ல வேண்டிய மெஸேஜை சூப்பரா சொல்லிட்டீங்க சகோதரா. தளபதி அவர்களின் நேர்த்தியான படம்.
ராஜ்குமார் பெரியசாமி - மெர்சல். விஜய் அவர்கள் மூன்று கதாபாத்திரங்களிலும் அற்புதமாக இருந்தார். பண்டிகைக்கு ரசிகர்களுக்கும், குடும்பங்களுக்கும் சரியான விருந்து. அட்லி மற்றும் அவரின் குழுவுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment