Tuesday, October 24, 2017

அமெரிக்காவில் 'மெர்சல்' படத்தின் வசூல் மில்லியன் டாலர்களைக் கடந்துள்ளதாக, அப்படத்தின் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாஜக கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததிலிருந்தே, வசூல் கணிசமாக கூடியது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமன்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தி படங்களைத் தாண்டி வசூல் செய்து வருவதாக இந்தி திரையுலகின் வியாபார நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவில் 'மெர்சல்' படத்தை வெளியிட்டிருக்கும் ATMUS ENTERTAINMENT நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
மில்லியன் டாலர் கனவு நனவானது! ஞாயிற்றுக்கிழமை மொத்த வசூல் 297214 (அமெரிக்க) டாலர்கள். சனிக்கிழமையன்று 972706 டாலர்கள். அமெரிக்காவில் மட்டும் மெர்சல் படத்துக்கு வசூல் மொத்தம் 10,02,420 டாலர்கள்!
#MillionDollarMersalUSA அமெரிக்காவில் இதுவரை அதிக வசூலான டாப் 5 தமிழ்ப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்தது மெர்சல்! விஸ்வரூபம், லிங்கா, எந்திரன் மற்றும் கபாலி ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன. மெர்சல் இன்றைய (ஞாயிறு) நாள் முடிவில் நான்காம்  இடத்தைப் பிடித்துவிடும். அமெரிக்காவில்  தமிழ்ப் பட வசூலில் ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய் இருப்பார்
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...