Friday, November 10, 2017

பேராசிரியர் மீது பாலியல் புகார்: குழு விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி பயிற்சி மாணவி, பேராசிரியர் மீது கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக, ரகசிய விசாரணை நடந்தது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், பயிற்சி டாக்டராக பணியாற்றி வரும் மாணவி, உதவிப் பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அக்., 25ல், மருத்துவக் கல்வி இயக்குனர், டீன் ஆகியோரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க, கல்லுாரியைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் உள்ளிட்ட, ஏழு பேர் குழு அமைக்கப் பட்டது. இக்குழுவினர், மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நேற்று விசாரணை மேற்கொண்டனர். புகார் கூறிய மாணவி, அவரது தாய் மற்றும் உதவி பேராசிரியரிடம், தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, டீன் டாக்டர் வனிதாமணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

T.N. govt. fixes issues with non-subdivision online patta transfers

T.N. govt. fixes issues with non-subdivision online patta transfers The Hindu Bureau CHENNAI. 04.07.2026 The Tamil Nadu government has simpl...