Tuesday, December 5, 2017

சேலத்தில் முதலில் செல்வது யார்? என்பது தொடர்பாக அரசு–தனியார் பஸ் டிரைவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
முதலில் செல்வது யார்? சேலத்தில் அரசு–தனியார் பஸ் டிரைவர்கள் திடீர் மோதல்
சேலம்,சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று கன்னங்குறிச்சிக்கு புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில் 45–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதேநேரத்தில் தனியார் பஸ் ஒன்றும் கன்னங்குறிச்சி செல்வதற்கு புறப்பட்டது. இதனால் முதலில் யார் செல்வது? என்பது தொடர்பாக இரண்டு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதனால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி மோதிக்கொண்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பழைய பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனடியாக அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த தகராறில் தனியார் பஸ் டிரைவர்கள் அருண், நித்திஸ், கண்டக்டர் கோபி ஆகியோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...