Tuesday, December 5, 2017

 கலெக்டரை வசை பாடிய 'மாஜி' எம்.எல்.ஏ., கைது
Added : டிச 04, 2017

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டரை ஒருமையில் பேசிய, காங்கிரஸ் முன்னாள், எம்.எல்.ஏ.,வை போலீசார் கைது செய்தனர். அரியலுார் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர், லட்சுமிபிரியா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, காங்கிரஸ் முன்னாள், எம்.எல்.ஏ., நல்லமுத்து, 'மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை' எனக் கூறி, கலெக்டரை ஒருமையில் திட்டினார். கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை ஒருமையில் பேசியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்த நல்லமுத்துவை கைது செய்யுமாறு, கலெக்டர், லட்சுமிபிரியா, போலீசாருக்கு உத்தரவிட்டார். அரியலுார் போலீசார், நல்லமுத்துவை கைது செய்தனர்.
நல்லமுத்து, பெரம்பலுார் மாவட்டத்தைச் நேர்ந்தவர். இவர், 1984ல், பெரம்பலுார் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். டாக்டரான இவர், தற்போது, அரியலுார் மாவட்டம், திருமானுாரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024