Tuesday, December 5, 2017

ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி உங்களுக்காக

*சிறப்புத்தகவல்கள் ஆதார்கார்டில் பிழைகளை திருத்தம் செய்தல்
இந்தியாவில் உள்ள அனை வருக்கும். ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக தற்போது இந்திய அரசால் வழங்கப்பட்டிருக் கிறது,இருப்பினும் ஒரு சிலருக்கு
பெயர், வயது, மொபைல் எண், முகவரி அல்லது மற்ற குறிப்பு களில்ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்* இதையடுத்து, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு குறிப்புகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும்அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை மாற்றம் செய்வது எப்படி?

✅ஆதார் அடையாள அட்டைக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் ஆக வேண்டும்.

✅மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

✅ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

✅ இந்திய குடிமக்கள் தங்களு டைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்

*ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்*

✅ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக மொபைல் எண் மிக முக்கியம்.

✅ஆதார் கார்டு வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) அனுப்பி வைக்கப்படும்.

✅ஒரு வேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஓடிபி பெற முடியும். ஒரு வேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

✅ ஓடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

✅ எந்தெந்த குறிப்புகளை அப்டேட் செய்ய வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

✅தேர்ந்தெடுத்த குறிப்புகளை, தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் அப்டேட் செய்யவும். அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

✅ பெயர் திருத்தம் அல்லது முகவரி திருத்தம் செய்ய பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம்.

✅பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

✅ தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

✅இதன் மூலம் உங்களுக்கு தேவையான குறிப்புகளை எளிதில் மாற்றம் செய்து சரியான ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024