Thursday, February 22, 2018

  கரையான்சாவடி-ஆவடி சாலையில் ரூ.4½ கோடியில் பாலம் கட்ட பூமிபூஜை

கரையான்சாவடி-ஆவடி சாலையில் ரூ.4½ கோடியில் பாலம் கட்ட பூமிபூஜைகூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பெய்த கன மழையில் முற்றிலும் இடிந்து சேதமடைந்தது.

பிப்ரவரி 22, 2018, 04:15 AM
பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரத்தில் கரையான்சாவடி-ஆவடி சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பெய்த கன மழையில் முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர்தூரம் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டது. அந்த இடத்தில் ராட்சத குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதே இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.4½ கோடியில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி பாலம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆவடி பெருநகராட்சி 48 வார்டுகளில் மேற்கொள்ளும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகள் காரணமாக சாலைகள் சேதமடைந்து, பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.71 கோடியில் 67 தார் சாலைகள் மற்றும் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணியையும் அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024