Thursday, February 22, 2018

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி

Updated : பிப் 21, 2018 23:48 | Added : பிப் 21, 2018 23:34 |


புதுடில்லி: நாட்டை அதிர வைத்த பஞ்சாப் நேஷன் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி விவகாரத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இந்நிலையில் 55 ஆண்டுகளுக்கு முன் கார் லோனுக்காக மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 ஆயிரம் வாங்கிய கடனை அவரது மனைவி லலிதா சாஸ்திரி கவுரமாக பாக்கி இன்றி வங்கியில் செலுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

1964-ம் ஆண்டு நேரு மறைவுக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவியேற்றார். அப்போது அவர் சொந்தமாக கார் வாங்கிட நினைத்தார் பிரிமீயர் பத்மினி மாடல் காரின் அப்போதைய விலை ரூ.12,000 , சாஸ்திரி கையில் வைத்திருந்ததோ ரூ. 7 ,000 ஆயிரம் தான் மீதம் ரூ.5 ஆயிரத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 5 ஆயிரம் கடன் பெற்றார். பின்னர் கடந்த 1966-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி திடீரென காலமானார்.

சில நாட்கள் கழித்து சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததது அதில் உங்களது கணவர் ரூ.5 ஆயிரம் வங்கி கடன் பெற்றுள்ளார் அதனை திருப்பி செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.



இதையறித்த மனைவி தனது கணவரின் பென்சன் தொகையில் இருந்து செலுத்துவதாக உறுதியளித்து சொன்னபடி எவ்வித பாக்கியின்றி கடனை கவுரவமாக செலுத்தினார்.

அந்த கார் இன்றும் டில்லி மோதிலால் நேரு மார்க் சாலையில் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் DEL -6 என்ற எண்ணுடன் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024