Saturday, February 3, 2018

நீட் தேர்வு: மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்!!!

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்
என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பட்ஜெட் விளக்க ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு முன் தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியது:
தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு கோரிக்கை. நீட் தேர்வு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த முறை நடத்தப்பட்டது. இதன் மூலம் தெருக்கோடியில் உள்ள மாணவர்களுக்குக் கூட நீட் மூலம் இடம் கிடைத்து மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மறுபடியும் நிச்சயமற்ற தன்மையை வைத்துக் கொண்டு மாணவர்களை யாரும் குழப்பக்கூடாது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநில பாடத் திட்டமும் நீட் தேர்வில் சேர்த்துக் கொள்ளப்படும் என மிகத் தெளிவாக கூறி உள்ளார். மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற நன்றாக படிக்கச் சொல்வதே சரி. இதில் அரசியல் கூடாது.
தமிழ் ஓங்கி ஒலிக்கும்: தமிழ் உணர்வு பாஜக-வுக்கு அதிகம் உள்ளது. வைகோ உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், இனிமேல் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது.

தமிழ் மொழி முதுமொழி; தெய்வமொழி. பாஜக ஆட்சியில் தமிழ் நிச்சயமாக தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். பாஜக தலைவர்கள் யாரும் தமிழ் பற்றில் வைகோவுக்கு குறைந்தவர்கள் அல்ல என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...