புளி விலை குறைவுக்குக் காரணம் சொன்ன அண்ணா! நினைவுதினச் சிறப்புப் பகிர்வு!
ஜெ.பிரகாஷ்
Chennai:
“சீமான்களில் சிலருக்குக்கூடச் சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது” என்றவர் பேரறிஞர் அண்ணா. ஆம், அவர் சொன்னது உண்மைதான். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் கிடையாது என்கிறார்கள் நம் ஊர் அரசியல்வாதிகள்.
எழுத்து, பேச்சு, நாடகம், சினிமா, அரசியல் எனப் பலவற்றிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் அண்ணா. அவருடைய நினைவு தினம் இன்று. அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காகவே காத்திருந்த மக்கள் கூட்டம் பல. அவருடைய கூட்டம் எந்த ஊரில் நடைபெற்றாலும் அந்த ஊர், அன்று திருவிழாக் கோலம் பூண்டுவிடும் அளவுக்கு அண்ணாவின் பேச்சு இருக்கும். இன்றும் நம் ஊர் ஆட்சியாளர்களில் சிலர் பேசுகிறார்கள், என்ன பேசுவதென்றே தெரியாமல். இதுநாள்வரை... ஜெயலலிதா, அவர்களை எல்லாம் பேசாமல் வைத்திருந்ததற்கு இப்போதுதான் காரணம் தெரிகிறது என்று நாள்தோறும் சமூக வலைதளங்கள் வறுத்தெடுக்கின்றன.
பாட்டியிடம் பேச மறுப்பு:
குறுகிய நேரமே கிடைத்தாலும் அதை மக்கள் விரும்பும்படியாகப் பேசுவதில் வல்லவரான அண்ணா, ஒருசமயம் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, “மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது எமக்கிடுங்கள் முத்திரை” என ஒருசில மணித்துளிகள் மட்டுமே பேசி தன்னுடைய பேச்சாற்றல் மூலம் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்துநின்றார். அதேபோல் ஆங்கிலத்திலும் திறமையாகப் பேசக்கூடியவராக அண்ணா திகழ்ந்தார்.
ஆங்கிலத்தில் பேசுவதே மிகப்பெரிய கெளரவம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த அன்றைய காலத்தில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா, ஒரு விடுமுறையின்போது அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றாராம். அப்போது பேரனைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்த பாட்டி, “காலேஜ் படிப்பெல்லாம் படிக்கிறியே துரை.. பாட்டிக்கு கொஞ்சம் இங்கிலீஷ்லே பேசிக் காட்டேன்...” என்று பாசத்துடன் கேட்டாராம். பாட்டி எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்துவிட்டாராம் அண்ணா. அத்துடன், “ஆங்கிலத்தில் பேசினால் உனக்கென்ன புரியும்? தேவையில்லாமல் வேண்டாம்” என்று கூறி மறுத்துவிட்டாராம்.
மாணவர்களுக்குப் பதில்:
பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தபோதிலும், போலித்தனமான கெளரவத்துக்காகத் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லையாம். அதே நேரத்தில், தன்னுடைய அறிவுக்குச் சோதனை வருகிறது எனும் பட்சத்தில் அதற்கு முடிவுகட்டாமல் விட மாட்டார் அண்ணா. ஒருமுறை அண்ணாவின் ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நினைத்த சில இங்கிலாந்து மாணவர்கள், “ ‘Because’ (ஏனெனில்) என்ற வார்த்தை தொடர்ந்து மூன்றுமுறை வருவது போன்றதொரு ஆங்கிலச் சொற்றொடரைக் கூற முடியுமா” என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அண்ணா, “No sentence can begin with because because, because is a conjunction” (எந்த வாக்கியமும் ஏனெனில் என்ற வார்த்தையைக் கொண்டு தொடங்காது. ஏனெனில், ‘ஏனெனில்’ என்பது ஓர் இணைப்புச்சொல்.) என்று மின்னல் வேகத்தில் பதிலளித்தாராம்.
அதேபோல், ஒருசமயம் அமெரிக்க நாட்டு மாணவர்களிடம் உரையாடியுள்ளார். அப்போது மாணவர்களில் ஒருவர் எழுந்து, “தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான, ‘A, B, C, D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா” என்று கேட்டாராம். அதற்கு அண்ணா, ஒன்றுமுதல் தொண்ணூற்று ஒன்பது (1 - 99)வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னாராம். நூற்றை (100) ஆங்கிலத்தில் சொன்னால், அதில் ‘D’ என்னும் எழுத்து வந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது, “STOP” என்று நூறு வார்த்தைகளையும் கூறி, அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம். தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் சுவாரஸ்யமாகவும், தொடர்ச்சியாகவும் பேசக்கூடிய ஆற்றல்பெற்றவரான அண்ணா, “பேசும் பொருள் பயன்படத்தக்கதாகவும் வீணான வம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக்கொள்வது நல்லது” என்று மேடைப்பேச்சுக்கு இலக்கணம் கொடுத்தார்.
எதிர்க்கட்சி என்றால் என்ன?
ஒருவருடைய பேச்சு என்பது மற்றவருக்கு மாற்றத்தையும் மகத்துவத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியானதாகத்தான் இருந்தது அண்ணாவின் பேச்சு. பேச்சில் நடைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் நகைச்சுவையாய்ப் பேசியவர் அண்ணா. அவர், முதல்வராக இருந்த சமயம் சட்டசபையில், “விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறினர். இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், “புளி விலை குறைந்துள்ளதே... அது யார் சாதனை” என்று கேலியாய்க் கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணா, “அது, புளியமரத்தின் சாதனை” என்று சொல்ல சபையே மகிழ்ச்சியில் திளைத்ததாம்.
எந்த மனிதருக்கும் எதிரி இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது. அதுபோன்றுதான் எந்தக் கட்சிக்கும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஓர் எதிர்க்கட்சி இருக்கும். நாட்டில் ஓர் எதிர்க்கட்சியின் மதிப்பு எப்படி என்பதை அண்ணா சொன்ன இந்த உவமை மூலம் அறியலாம். “சமையல் செய்யும்போது,குழம்பு கூட்டுவோர் தாய்மார்கள். அப்போது, உற்றுக் கவனியுங்கள். கூட்டினது சட்டிக் குழம்பு. அதற்கு ஒருபிடி உப்பு சேர்ப்பார்கள். ஏன் ஒருபிடி உப்பு..? சட்டிக் குழம்பு போதாதா என்றால், அந்தக் குழம்பு யாருக்கும் பயன்படாது; யாரும் அதனைச் சாப்பிடவும் மாட்டார்கள். அப்படி உப்பில்லாத குழம்பு சாப்பிடுபவர்கள் இருப்பார்களானால், அவர்கள் நாக்கு செத்துப்போனவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும். எப்படி ஒரு சட்டிக் குழம்புக்கு, ஒருபிடி உப்புத் தேவையோ, அப்படித்தான் ஓர் ஆட்சிக்கு ஓர் எதிர்க் கட்சியும் தேவை” என்று சரியான உவமை சொன்ன பேரறிஞர் அவர்.
“ ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா?”
ஒருவர், பிரபலமானவராக இருந்தாலே பிரச்னைதான். அப்படியே அவர் அமைதியாக இருந்தாலும், மற்றவர்கள் அவரை விடுவதில்லை. இது, இன்று நேற்றல்ல. காலந்தொட்டே வருகிறது. அண்ணாவின் வாழ்க்கையிலும் இதுபோன்று ஒருசம்பவம் அரங்கேறியிருக்கிறது. நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகக் கோவைக்குச் சென்றிருந்தார் அண்ணா. அப்போது கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர், கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கின்றனர். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தாராளமாய்ப் பதில்சொல்ல, இறுதியில், “கார்ல் மார்க்ஸ் எழுதிய, ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா” என்றார்களாம். அதற்கு அண்ணா, “நான் திருக்குறள் படித்திருக்கிறேன்” என்றாராம். “நாங்கள் கேட்டது ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா என்பதுதான்” என்று மறுபடியும் வினா தொடுத்திருத்திருக்கின்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். அதற்கு அண்ணா, “நான் திருக்குறளையே படித்து முடித்துவிட்டேன் என்கிறபோது, ‘கேப்பிட’லை ஏன் தனியாகப் படிக்கவேண்டும்? ‘கேப்பிட’லில் தொழில் துறைகளைப் பற்றியும், ஆலைகளைப் பற்றியும் இருக்கிறது. ஆனால், திருக்குறளில் நீங்கள் சொல்கிற தொழில் துறைகளும் ஆலைகளும் மட்டுமல்லாது, மனிதச் சமுதாயத்துக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறது” என்றாராம். கேள்விக் கணைகள் தொடுத்தவர்கள் வாயடைத்துப் போனார்களாம்.
திரு.வி.க-வுக்குப் பதில்:
1936-ம் ஆண்டு, சென்னை நகரசபைத் தேர்தலுக்காகக் களமிறக்கப்பட்டார் அண்ணா. அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டார். அவரை ஆதரித்துப் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திரு.வி.க., “நந்தவனத்தில் நாயொன்று செத்துக் கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ... நந்தவனத்தை அழிப்பரோ... நாயையே அகற்றுவர். அதுபோலக் காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா அல்லது அதற்காகக் காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தைத் தூய்மைப்படுத்திக் காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும்” என்று பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.
அதற்கு அண்ணா, அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறாகப் பதில் சொன்னாராம். “திரு.வி.க. பேசும்போது, ‘நந்தவனத்தில் நாய் செத்துக்கிடந்தால் நாயை அகற்றுவதா அல்லது நந்தவனத்தை அழிப்பதா' என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம்பெறவும் நலிவடைந்தோர் குணம்பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா... நாய் நுழைந்தால், பின் அது நந்தவனமாகுமா? நலிந்தவர்க்கும் நலம்பயக்க வேண்டிய நந்தவனம் நாயைச் சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால், நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாம். அதனை அழித்துப் புதிதாகத் தோற்றுவிப்பதுதானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும்” என்ற அண்ணா பதிலுரைத்தாராம். அதற்கு, மறுபதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ்காரர்கள் கலைந்துவிடுவார்களாம்.
“ஆலயங்களில் விளக்கு எரியாது!”
அதேநேரத்தில், தன்னை எதிர்த்து நின்ற தோழர் பாலசுப்பிரமணியத்தைப் பற்றி அண்ணா பேசும்போது, “என்னுடைய நண்பர் பாலசுப்பிரமணியம். அவர், ‘நெய்க்கு தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா' என்ற தத்துவத் துறையைப் பற்றிப் படித்தவர். நான், ‘நெய்யும் தொன்னையும் மக்களுக்குக் கிடைக்கச் செய்வது எப்படி' என்று ஆராயும் பொருளாதாரத் துறையைப் பற்றிப் படித்தவன். இருவரில் யார் உங்களுக்குப் பயன்படுவோம் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுப் பேசுவாராம்.
இதற்கெல்லாம் மறுத்துப் பதில் சொல்ல முடியாத காங்கிரஸ்காரர்கள், வேறுவகையில் திசையைத் திருப்புவார்களாம். அந்தச் சமயத்தில், கோயில்களுக்கும் மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. இதை வைத்து காங்கிரஸ்காரர்கள், “அண்ணாதுரைக்கு ஓட்டுப்போட்டால், ஆலயங்களில் விளக்கு எரியாது” என்று துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து அண்ணாவுக்கு எதிராக வெளியிட்டனர்.
ஆனால், இவை எவற்றுக்கும் பயப்படாத அண்ணா, “இந்த நகரத்தில் உள்ள சேரிகள் எல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்தச் சேரிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கிற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளில் மக்கள் இருட்டிலே வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்க்காலி கடித்தாலும் அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்குப்போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப்போட்டால் ஆண்டவன் முகம் கறுக்குமேயொழிய, ஒளி பெறாது” என்று உண்மையை உரைத்தார். ஆனால், மக்கள் விழிப்படையவில்லை என்பதை அன்றைய தேர்தல் காட்டியது. ஆம், அண்ணா அதில் தோல்வியுற்றார். அதேபோல், இன்றும் மக்கள் தாம் செய்த தவற்றை எண்ணி வருந்திக்கொண்டிருக்கின்றனர்.
தோல்விக்குப் பதில்:
தேர்தலில் தோல்வியுற்ற அண்ணாவிடம் அவரது நண்பர்கள், “தேர்தலில் தோற்றும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறீர்களே” என்று வினவினராம். அதற்கு அண்ணா, “தேர்தலில் போட்டியிடுவதும் பிரசாரம் செய்வதும் நமது உரிமை; ‘மக்களை அணுகி, எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பதுகூட நமது உரிமைதான். ஆனால், ‘ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை' என்று கேட்கக்கூடிய உரிமை நமக்கேது? வெற்றியோ... தோல்வியோ... நம் கையில் இல்லை; மக்கள் கையில்தான் இருக்கிறது என்கிறபோது அதைக் கண்டு நாம் ஏன் வருத்தப்படவேண்டும்; துயரம்கொள்ள வேண்டும்” என்றாராம்.
இப்படியெல்லாம் தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் பாடுபட்ட அண்ணாவை, “இன்னும், இரண்டு ஆண்டுகள் அவர் இருந்திருந்தால், உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார்” என்று புகழ்ந்திருந்தார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். அதனால்தானோ, என்னவோ, காலன் அவரைக் கடத்திச் சென்றுவிட்டான்.

No comments:
Post a Comment