Tuesday, February 6, 2018

நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திங்களன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமம் இல்லை. இவ்வாண்டு 'நீட்' தேர்வில் அரசின் பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்ட வாரியாக பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்துஅவர்களின் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்; மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...