Tuesday, May 12, 2015

மாணவர்களிடம் அதிகரித்து வரும் தட்டச்சு பயிலும் ஆர்வம்: வேலைவாய்ப்பு அதிகம்

கோப்புப் படம்

அரசு பணி மற்றும் டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகி இருப்பதால் மாணவர்கள் மத்தியில் தற்போது தட்டச்சு பயி லும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மாணவர்களுக்கு தட்டச்சு பயிற்சி என்பது 20 ஆண்டுக்கு முன் கூடுதல் தகுதியாக கருதப் பட்டது. ஆனால், கணினி வருகைக் குப் பின்னர் தட்டச்சு பயிற்சியின் முக்கியத்துவம் குறையத் தொடங் கியது.

மத்திய, மாநில அரசு பணிகளில் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் தட்டச்சு பயிற்சி மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

இருப்பினும் தட்டச்சு பயிற்சி பெற்றால் கணினியில் எளிதாக கீ போர்டுகளை இயக்க முடியும் என்பதால் வெகு சிலரே தட்டச்சு பயின்று வந்தனர்.

ஆனால், சமீப காலமாக மத்திய, மாநில அரசு பணிகளில் தட்டச்சர்களும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களும் அதிகளவில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு தனியார் துறையிலும் டேட்டா என்ட்ரி வேலைக்கு அதிகளவு பணியாளர்கள் தேவைப் படுகிறார்கள். இதன் காரணமாக, மாணவர்கள் மத்தியில் தட்டச்சு பயிலும் ஆர்வம் தற்போது அதிக ரித்து வருகிறது.

இதுகுறித்து சென்னை தி.நகரில் இயங்கும் பாரம்பரியம் வாய்ந்த ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு நிறு வனத்தின் கவுரவ முதல்வர் எஸ்.சேகர் “தி இந்து”விடம் கூறிய தாவது:

தற்போது தட்டச்சு முடித்தவர் களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதால் மாணவர் களும், பட்டதாரிகளும் ஆர்வத் தோடு தட்டச்சு பயில வருகிறார்கள். தட்டச்சு தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் சம் பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை அளிக்க தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. வீட்டு வாச லுக்கே வந்து காரில் கூட்டிச் செல் கின்றனர். அந்த அளவுக்கு டேட்டா என்ட்ரி பணிக்கு “டிமாண்ட்” இருக்கிறது.

தட்டச்சு தெரிந்தால் கணினியை எளிதாக இயக்க முடியும் என்பதால் பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஆர்வத்தோடு தட்டச்சு பயில வருகிறார்கள். தட்டச்சு தெரிந்தவர்களுக்கு டிடிபி மையங்கள், பிரவுசிங் சென்டர் கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள், பதிப்பகங்கள் போன்ற வற்றிலும் வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

தட்டச்சில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வாய்ப்புகள் அதிகம். பயிற்சி பெற்ற தட்டச்சர்கள் கிடைக்காத காரணத்தால், வழக்கு தொடர்பான தட்டச்சு பணிகளை கவனித்துக்கொள்ளும் வகையில் மூத்த வழக்கறிஞர்களே இப்போது தட்டச்சுப் பயில வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தட்டச்சு தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு தடவை (பிப்ரவரி, ஆகஸ்ட்) நடத்தப்படுகின்றன. சுமார் 3 மாதங்கள் பயிற்சி பெற்றாலே தட்டச்சு கீ போர்டுகளை சராசரி வேகத்தில் இயக்கிட முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024