Wednesday, May 13, 2015

சென்னையில் நில அதிர்ச்சி; அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கின ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர்

சென்னை,


நேபாளத்தில் நேற்று பகல் 12.40 மணிக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. சென்னையிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கின.

சென்னையில் நிலநடுக்கம்

சென்னையில் நந்தனத்திற்கும், ஆழ்வார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதி, கோடம்பாக்கம் பகுதி, பட்டினப்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்போது அடுக்குமாடி கட்டிடங்கள் சற்று குலுங்கின. அந்த கட்டிடத்தில் உள்ள டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்தன.

நந்தனத்திற்கும், ஆழ்வார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள 8 மாடி கட்டிடம் குலுங்கியதால், அந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் அலறி அடித்துக்கொண்டு தரைக்கு வந்து வீதியில் நின்றனர்.

அப்போது அவர்களில் சிலர் கூறியதாவது:–

இந்த கட்டிடத்தில் சாப்ட்வேர் கம்பெனி உள்ளது. 12.40 மணி அளவில் நாங்கள் உட்கார்ந்து இருந்த நாற்காலிகள் திடீர் என்று ஆடின. மேலும் கட்டிடமும் குலுங்கியது. இதை உணர்ந்த அனைவரும் கீழே இறங்கி வீதியில் நின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் அவர்கள் அங்கேயே நின்றனர். பின்னர் அதிர்ச்சி இல்லை என்று தெரிந்த பின்னர் மீண்டும் வேலைபார்க்க சென்றனர்.

கோடம்பாக்கம்

இதே போல கோடம்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

அதேபோல சாந்தோம், பட்டினப்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு, வடபழனி, வளசரவாக்கம் உள்பட பல்வேறு இடங்களிலும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனால் அங்கு இருந்த அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு ஓடி வந்து நின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த நில நடுக்கத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து சென்னையில் உள்ள நில அதிர்ச்சி அலுவலக அதிகாரி கூறுகையில், ‘‘நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் சாந்தோம், வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

நேபாளத்தில் நேற்று பகலில் மீண்டும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் நில அதிர்வு பதிவானது.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...