Sunday, October 9, 2016

கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் கருவூல உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
dinakaran

மதுரை: கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி ஓய்வு பெற்ற விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் செய்த கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.   சிவகங்கை மாவட்டம், ஆணையடியைச் சேர்ந்த முத்துராமன், செக்காலை கனகசபாபதி, கண்டதேவி ஜெயப்ரகாஷ் ஆகியோர் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றனர். இவர்கள், தேவகோட்டை துணைக்கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயித்தபோது கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறி, பென்ஷனில் முறையே ரூ.1,520, ரூ.1,404, ரூ.1,531, கடந்த ஏப்.1 முதல் பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கான உத்தரவு ஜூலை 12ல்தான் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடுவதற்கு முன்பே ெபன்ஷனில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பென்ஷனில் பிடித்தம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இதைப் போன்ற வேறு வழக்கில் ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேவகோட்டை துணைக்கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024