மக்கள் நினைப்பது என்ன? : கருத்து கேட்கும் பிரதமர்
நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற மத்திய அரசின் நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துகளை, பிரதமர் மோடிக்கு, 'ஆப்' வாயிலாக தெரிவிக்கலாம்.நாட்டில் கறுப்புப் பண புழக்கத்தையும், கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, பல துறைகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்நட வடிக்கை குறித்து மக்களின் எண்ணத்தை நேரடியாக அறிய, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இதற்காக, 'ஸ்மார்ட் போன்'களில், 'ஆப்' வாயிலாக, பிரதமருக்கு, மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் சென்று, 'நரேந்திர மோடி' என, ஆங்கிலத்தில் டைப் செய்து, டவுண்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துக்களை பிரதமர் நேரடியாக அறிந்து கொள்ள எடுத்துள்ள முயற்சி, பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment