Tuesday, November 8, 2016

மாநகரில் வாழ ரூ.1,000 போதாது!'



புதுடில்லி:'டில்லி போன்ற மாநகரில் வாழ்வதற்கு, 1,000 ரூபாய் உதவித் தொகை மிகவும் குறைவு' எனக்கூறிய கோர்ட், குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உதவித் தொகையை உயர்த்தி உத்தரவிட்டது.

ஜீவனாம்சம் :

டில்லியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, 2014, மே மாதம், திருமணம் நடந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் வீட்டார், அதே ஆண்டு டிசம்பரில், அந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தினர். இதை எதிர்த்து அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட், அந்த பெண்ணுக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையாக, மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கும்படி, கணவனுக்கு உத்தரவிட்டது. 'இந்த தொகை மிகவும் குறைவு' எனக்கூறி, அந்த பெண், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முறையீடு செய்தார்.

வாழ முடியாது :

வழக்கை விசாரித்த கோர்ட் பிறப்பித்த உத்தரவு:டில்லி போன்ற மாநகரில் வாழ்வதற்கு, 1,000 ரூபாய் மிகவும் குறைவு. தனி ஒரு நபரால், இந்த தொகையை வைத்து வாழ முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மாதம், 3,000 ரூபாய் ஜீவனாம்சத் தொகையாக, அவர் கணவர் வழங்க வேண்டும்.சட்டப்படி திருமணம் செய்த பெண் வாழ்வதற்கு தேவையான பணத்தை வழங்குவது, ஆணின் கடமை. இந்த பொறுப்பில் இருந்து கணவர் தப்ப முடியாது.இவ்வாறு கோர்ட் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024