இந்தியாவில் வேகமாக பரவும் கம்ப்யூட்டர் வைரஸ்
புதுடில்லி:உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை தாக்கி செய லிழக்கச் செய்து வரும், வான்னாக்ரை' வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவத் துவங்கி இருப்ப தாக, கம்ப்யூட்டர் அவசரநிலை பாதுகாப்பு குழு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின், என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் சர்வர் கம்ப்யூட்டர்களை, மென்பொருள் திருடர்கள், சாதுர்யமாக தாக்கி, அந்த கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்பட்டி ருந்த, 'மால்வேர்' எனப்படும், மென்பொருள் வைரஸ்களை களவாடி உள்ளனர்.
ஆந்திராவிலும் பாதிப்பு:'வான்னாக்ரை' எனப்
பெயரிடப்பட்டுள்ள இந்த கொடிய வைரஸ், பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உட்பட, 100க்கும் மேற் பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர் களில்,பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்திராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த மான கம்ப்யூட்டர்களும், இந்த வைரஸால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்கு தல் நடப்பதை தடுக்கவும், 'சைபர் கிரைம்' எனப் படும், இணையக் குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க வும், உருவாக்கப்பட்ட, சி.இ.ஆர்.டி.இன் எனப்படும், கம்ப்யூட்டர் அவசரநிலை பாதுகாப்பு குழு, வைரஸ் குறித்த புதிய எச்சரிக்கையை, நேற்று விடுத்தது; அதில்கூறப்பட்டுள்ளதாவது:
'வான்னாக்ரை' எனப் பெயரிடப்பட்டுள்ள, புதிய வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. 'விண்டோஸ்' எனப்படும், இயங்குதளத்தை கொண்டு செயல்படும் கம்ப்யூட்டர்களில், எஸ்.எம்.பி., எனப்படும், சர்வர் கம்ப்யூட்டர் தகவல் தடுப்பு முறையில் உள்ள
குறைபாடுகளை பயன் படுத்தி, இந்த வைரஸ் பரவத் துவங்குகிறது.
தடுப்பு நடவடிக்கை:
இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும் கம்ப்யூட்டரில், 'பேட்ச் சஸ்' எனப்படும், மென்பொருள் தொகு ப்பை நிறுவலாம். வைரஸ் பாதிப்பு தடுப்பு மென் பொருளை நிறுவும் நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளலாம்.இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
No comments:
Post a Comment