Tuesday, May 16, 2017

தற்காலிக ஓட்டுநர்கள் தேவை: திருச்சியில் அறிவிப்பு

திருச்சி கோட்டத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பேருந்துகள் பல இயக்கப்படாமல் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நிலையில், தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதற்காக, பலர் விண்ணப்பித்து பேருந்துகளை இயக்கினர். இந்நிலையில், பேருந்து இயக்கம் குறைவால் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.

இதை சரிசெய்யும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய ஒட்டுநர், நடத்துநர் உரிமம் பெற்றுள்ள நபர்கள் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்காக திருச்சி மண்டலத்தில் உள்ள போக்குவரத்துக் கிளை அலுவலக மேலாளரை அணுகி வேலை வாய்ப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளில் பணிபுரிவதற்கு போராட்டத்தை நடத்திவரும் போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025