29ல் திருவாரூர் ஆழி தேரோட்டம்
பதிவு செய்த நாள்: மே 15,2017 21:56
திருவாரூர்: 'திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், திட்டமிட்டபடி வரும், 29ல் நடைபெறும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித் தேரோட்டம். கடந்த ஆண்டு, ஜூன், 16ல் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. நடப்பு ஆண்டு, வரும் 29ல், ஆழித் தேரோட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு, தேர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு, அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம், 96 அடி. அதேபோல், நடப்பு ஆண்டும், 96 அடி உயரத்தில் தேர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்து, வரும், 29 காலை, 7:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் வடம் பிடிக்கப்பட்டு, ஆழித் தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, 28ல் காலை, விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆழித் தேரோட்டம் அடுத்த மாதம், 4ம் தேதி நடைபெற இருப்பதாகவும், தேரின் அகலம் குறைக்கப்பட்டு, தேர் கட்டும் பணி நடைபெறுவதாகவும், 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் பரவி வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும், ஆழித் தேரின் அகலம், 2 அடி குறைக்கப்பட்டு இருப்பதாக கருத்து நிலவுகிறது.
இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'திட்டமிட்டபடி, ஆழித் தேரோட்டம், வரும், 29ல் நடைபெறும். ஆழித் தேரோட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி என்றும், அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் அகலம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், 'வாட்ஸ் ஆப்'பில் பார்த்ததாக, பக்தர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்; இது, தவறான தகவல். ஆழித் தேர் கட்டுமானப் பணியில் அகலம் குறைக்கப்படவில்லை' என்றனர்.
No comments:
Post a Comment