Tuesday, May 16, 2017

முதுநிலை மருத்துவ இடங்களில் அரசு டாக்டர்களுக்கு அதிக இடம்

பதிவு செய்த நாள்: மே 15,2017 23:50

அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளில், இட ஒதுக்கீடு இல்லாமல், அரசு டாக்டர்கள் அதிக இடங்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,489 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, ௭௬௨ இடங்கள் உள்ளன. இதில், ௫௦ சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராடி வந்த நிலையில், அதை ஏற்காத சென்னை உயர் நீதிமன்றம், எம்.சி.ஐ., விதிமுறைப்படி, கவுன்சிலிங் நடத்த உத்தரவிட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு, அரசு டாக்டர்கள் மற்றும் அரசு சாரா டாக்டர்கள் என, 4,555 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கில், ௭௨௨ பேர் இடங்களை பெற்றனர். இதில், 710 பேர் அரசு டாக்டர்கள்; ௧௨ பேர் மட்டுமே, அரசு சாராத டாக்டர்களுக்கு இடங்கள் கிடைத்தன. இந்நிலையில், கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றியோருக்கு, ௩௦ சதவீதம் வரை, அதிக மதிப்பெண் வழங்கியதே, அரசு டாக்டர்கள், அதிக இடங்களை பெற காரணம் என, இடங்கள் கிடைக்காத, அரசு சாராத டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: எம்.சி.ஐ., விதியின் படியே, கவுன்சிலிங்கை, அரசு நடத்தியது. அரசு டாக்டர்களுக்கு, சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. மதிப்பெண் அடிப்படையில் தான், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், அரசு டாக்டர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால், அதிக இடங்கள் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Shape, size of retina veins can predict stroke risk: Study

Shape, size of retina veins can predict stroke risk: Study DurgeshNandan.Jha@timesofindia.com 15.01.2025 New Delhi : The shape and size of v...