ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயமா? : டில்லி கோர்ட் அதிரடி உத்தரவு!
பதிவு செய்த நாள்: மே 15,2017 22:25
புதுடில்லி: 'தன் திருமணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, அதற்கான கோர்ட் உத்தரவை கணவன் பெறும் வரை, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், அனைத்து பலன்கள் மற்றும் பாதுகாப்பை பெற, மனைவிக்கு உரிமை உண்டு' என, டில்லி கோர்ட் கூறிஉள்ளது. டில்லியைச் சேர்ந்த ஒருவர், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த மனைவிக்கு, மாதந்தோறும், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டுமென, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, டில்லி செஷன்ஸ் கோர்ட்டில், மேல்முறையீடு செய்த அந்த நபர், தன்னை திருமணம் செய்வதற்கு முன், தன் மனைவி, வேறொருவரை திருமணம் செய்திருந்ததாக, மனுவில் குறிப்பிட்டார்.
உரிமை உண்டு
இந்த வழக்கை விசாரித்த, செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டதாவது:ஆண், பெண் இடையே நடந்த திருமணம், செல்லாததாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை கணவன் பெறும் வரை, குடும்ப வன்முறை சட்டப்படி, அனைத்து பலன்கள் மற்றும் பாதுகாப்பை
பெற, மனைவிக்கு உரிமை உண்டு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக, திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் திருமணம் நடந்ததை நிரூபிக்க, சான்றிதழ் மட்டும் போதாது; எனவே, மனு நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி
உத்தரவிட்டார்.
வரதட்சணை : இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்திருந்த மனுவில், 'கடந்த, 2013ல், எனக்கு திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே, கணவரும், அவர் குடும்பத்தினரும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். 'இரண்டு மாதங்களில், அந்த வீட்டை விட்டு என்னை துரத்திவிட்டனர். எனவே, எனக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்' என, கூறியிருந்தார்.
No comments:
Post a Comment