‘ஆதார் இ அட்டை’: ரயில்வேயில் அடையாளச் சான்றாக சேர்ப்பு
ஆதார் இ அட்டை ரயில்வேயில் அடையாளச் சான்றாக சேர்க்கப் பட்டுள்ளது. எனவே, ரயில் பயணத்தின்போது பயணிகள் இதை அடையாளச் சான்றாக காண்பிக்கலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்யும்போது அடையாளச் சான்று அவசியம் காண்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பேன்கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டை, தேசிய வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை காண்பிக்கலாம்.
இந்த பட்டியலில் தற்போது புதியதாக ‘ஆதார் இ அட்டை’யும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பய ணத்தின்போது பயணிகள் இதை அடையாளச் சான்றாக காண்பிக்க லாம். www.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை பதிவு செய்து ‘ஆதார் இ அட்டை’யை பதிவிறக்கம் செய்து கொண்டு பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment