Thursday, June 1, 2017

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி தனிக்கோட்டில் டி.டி.வி.தினகரனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்படுகிறது.

ஜூன் 01, 2017, 04:45 AM

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்குள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய நீதிமன்ற காவல் வருகிற 12–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை ஏற்கனவே தனிக்கோர்ட்டு நிராகரித்துவிட்டது.ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. அந்த மனுக்கள் மீது புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பூனம் சவுத்ரி தெரிவித்து இருந்தார்.

இதனால் தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரியின் கோர்ட்டு அறையில் நேற்று டெல்லி போலீஸ் தரப்பிலும், தினகரன் தரப்பிலும் ஆவலுடன் கூடி இருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு கோர்ட்டு தொடங்கியதும், தீர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டிய உதவியாளர் விடுப்பில் உள்ளதால் நாளைக்கு (இன்று) தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

எனவே ஜாமீன் மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார். தினகரனுக்கும், மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...