Thursday, July 20, 2017

சுற்றுலாத் துறை சார்பில் 108 அம்மன் கோயில் சுற்றுலா
By DIN | Published on : 19th July 2017 12:23 PM




மாநில அளவில் பிரசித்தி பெற்ற 108 அம்மன் திருக்கோயில்களுக்கு வழிபாடு செய்வதற்காக சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் 5 நாள் ஆடி மாதச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறை, ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயனடையும் வகையில் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
108 திருக்கோயில்களில் வழிபாடு: சென்னை } காளிகாம்பாள், மேல்மருத்தூர்}ஆதிபராசக்தி, சிதம்பரம்}அகிலாண்டேஸ்வரி, வைத்தீஸ்வரன் கோயில்}தையல் நாயகி, மாயவரம்}படைவேட்டையம்மன், திருக்கடையூர்}ஸ்ரீஅபிராமி, காரைக்கால்}அம்மையார், நாகப்பட்டினம்} நீலாயுதட்சிணியம்மன், மதுரை}மீனாட்சி அம்மன், திரெüபதி அம்மன், உறையூர்}வெக்காளியம்மன், திருவானைக்காவல்}அகிலாண்டேஸ்வரி, சமயபுரம்}ஆதிமாரியம்மன், சிறுவாச்சூர்}மதுரகாளியம்மன், திருவக்கரை}வக்ரகாளியம்மன் உள்பட 108 அம்மன் திருக்கோயில்களில் வழிபாடு செய்வதற்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்பான தங்கும் வசதி: ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஐந்தாம் நாள் இரவு சென்னை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு நாளும் சுற்றுலா வளர்ச்சித்துறை நடத்தும் தங்கும் விடுதிகளில் அனைத்து வசதியுடனும் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவர்.
முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயில், 2}ஆம் நாள் தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலிலும், 3}வது நாள் மதுரை தமிழ்நாடு ஹோட்டலிலும், 4}ஆம் நாள் திருச்சி தமிழ்நாடு ஹோட்டலிலும் என ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்: இச்சுற்றுலாவுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து, தங்கும் வசதியுடன் 2 பேருக்கு ரூ.5,500, 4 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு}ரூ.4,900, தனி நபருக்கு தனி அறை வசதியுடன் ரூ.6,500 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 044} 25333444, 25333333, 25333857, 25333385 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வேலை நாள்களில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...