Wednesday, July 12, 2017

சம்பளத்துடன் ஒரு நாள் விடுப்பு : பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017

22:31 புதுடில்லி: சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை அடுத்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தன் பெண் ஊழியர்களின் மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் மும்பையைச் சேர்ந்த, 'டிஜிட்டல் மீடியா' நிறுவனம், கல்ச்சர் மெஷின். இந்த நிறுவனம், கடந்த மாதம், யூ டியூபில், வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம், அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களிடம், அவர்களின் மாதவிடாய் கால பிரச்னைகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டு பதில் பெறப்பட்டது.அவ்வாறு பதில் அளித்த பெண்களில் பெரும்பாலானோர், 'மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுப்பு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்' என, பதில் அளித்துள்ளனர். அந்த சமயத்தில், நிறுவனத்தின் ஆண் நிர்வாகியிடம் விடுப்பு கேட்க தயக்கமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்ச்சர் மெஷின் நிறுவனம், பெண் ஊழியர்கள், மாதவிடாய் காலத்தின் முதல் நாளில், சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிப்பதாக, அறிவித்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மிக்க மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024