Wednesday, July 12, 2017

'ஏசி' பஸ்களில் கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
23:03




சென்னை: நாடு முழுதும், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல், அமலுக்கு வந்தது. இதில், 'ஏசி' பஸ்களின் கட்டணத்திற்கு, 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம்மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகங்கள் இயக்கும், 'ஏசி' பஸ்களிலும், தனியார் இயக்கும் ஆம்னி பஸ்களிலும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 'ஏசி' பஸ்களில், வழக்கமான கட்டணத்துடன், ஜி.எஸ்.டி.,யாக, 5 சதவீதம் சேர்த்து
வசூலிக்கப்படுகிறது.சென்னை மாநகர, 'ஏசி' பஸ்களில், 15 - 100 ரூபாய் வரை கட்டணத்தில், ஜி.எஸ்.டி.,யாக, கூடுதலாக, ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை,வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், 'ஏசி'பஸ்களில், கூடுதலாக,5 சதவீத கட்டணம்வசூலிக்கிறோம்.'நாங்கள், பயணியரிடம் வரியை வசூலித்து, மத்திய அரசுக்கு செலுத்தி விடுகிறோம். அதை பயணியர் புரிந்து கொள்ள வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024