Thursday, July 13, 2017

பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடிக்கவில்லை : உர்ஜித் படேல்

பதிவு செய்த நாள்
ஜூலை 12,2017 18:59




எண்ணிக்கொண்டே இருக்கிறோம்; உர்ஜித் படேல்

புதுடில்லி: ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்., கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் இருவர் பணமதிப்பிழப்பிற்கு பின்பு எவ்வளவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளதாக பாராளுமன்ற குழு சார்பில் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் :'' கடந்த நவம்பரில் மொத்தம் 17.7 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. தற்போது 15.4 லட்சம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது.

நேபாள் மற்றும் கோ ஆப்ரேட்டிவ் வங்கிகளில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் வரவேண்டியதுள்ளது. மேலும் தபால் நிலையங்களில் பொதுமக்கள் மாற்றிய ரூபாய் நோட்டுக்கள் இன்னும் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை.

தற்போது வரை வந்துள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியை சிறப்பு குழு தெடர்ந்து நடத்தி வருகிறது. அந்த பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடந்து வருகிறது. பணி செய்பவர்களுக்கு ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.'' என கூறினார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கடந்த ஜனவரி மாதம் இதே போல் பாராளுமன்ற குழுவில் பணமதிப்பிழப்பு குறித்து பதிலளித்தார். ஆனால் எம்.பி.,களுக்கு மேலும் பல கேள்விகள் இருந்ததால் குழு தலைவர் வீரப்ப மொய்லி இடைப்பட்ட காலத்தில் 2 முறை உர்ஜித் படேலுக்கு பதிலளிக்க வருமாறு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024