Monday, July 17, 2017

பிசியோதெரபி டாக்டர்களுக்கும் கவுன்சில் - கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்

பதிவு செய்த நாள் 17 ஜூலை
2017
00:08

கோவை : பிசியோதெரபி டாக்டர்களுக்கென்று பிரத்யேக கவுன்சில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் பிசியோதெரபி டாக்டர்கள் நேற்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், ஏராளமான பிசியோதெரபி டாக்டர்கள் பங்கேற்றனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:

மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில், பிசியோதெரபி மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுத்துறையில் மாநில அளவிலான அனைத்து விளையாட்டு அணிகளுக்கும், பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க மத்திய விளைாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாட, ஒரு வீரருக்கு ஒரு டாக்டர் என்ற முறையில் டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும்.தமிழகத்தில், 2009ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டும், இதுவரை பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருகின்றன. மாவட்டத்துக்கு ஒரு அரசு பிசியோதெரபி கல்லுாரியாவது துவங்கப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில், பிசியோதெரபி டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024