Monday, July 24, 2017

பல்கலை துணைவேந்தர்கள் வசூலுக்கு முற்றுப்புள்ளி

பதிவு செய்த நாள்24ஜூலை
2017
01:10


பல்கலைகளில், துணைவேந்தர்களின் முறைகேடுகளை தடுக்க, பேராசிரியர் நியமனம், புத்தகம் அச்சிடுவது போன்றவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

தமிழக பல்கலைகளில், பல துணைவேந்தர்கள் மீது, அவ்வப்போது, முறைகேடு மற்றும் விதி மீறல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில் பேராசிரியர்கள் நியமனம் மற்றும் பழைய விடைத்தாள் காகிதங்களை விற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அது போல, மற்ற பல்கலைகளிலும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தில், துணைவேந்தர்கள் அதிக அக்கறை காட்டுவதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து, கல்வியாளர்களாக தேர்வு செய்யப்படும், துணைவேந்தர்கள் கல்வி கற்பிப்பதிலும், கல்லுாரிகளில் படிப்புகளை தரம் உயர்த்துவதிலும், அக்கறை காட்டாமல், நிர்வாகம், நியமனம் என, முறைகேடாக பணத்தை சேர்ப்பதில், கவனத்தை செலுத்துவதால், ஊழல் புகார்கள் எழுகின்றன.

எனவே, துணைவேந்தர்களின் அதிகாரம் மற்றும் வேலைப்பளுவை குறைக்கவும், உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன் படி, இனி வரும் ஆண்டுகளில், பல்கலைகளில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனங்களில் துணைவேந்தர்கள் ஈடுபடக்கூடாது. அதற்காக, புதிதாக உயர் கல்வி பணி நியமன முகமை அமைக்க உள்ளது.
அது போல, பல்கலை மற்றும் அரசு கல்லுாரிகளில் குவியும் பழைய காகித கட்டுகள், பயனில்லாத புத்தகங்கள், காலாவதியான விடைத்தாள்கள் போன்றவற்றை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான, டி.என்.பி.எல்., காகித நிறுவனத்துக்கு மட்டுமே விற்க வேண்டும்.
பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களுக்கான புத்தகங்களை, தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம், 'டெண்டர்' முறையில் வழங்கப்பட வேண்டும். தனியாக பல்கலைகளின் விருப்பத்துக்கு, அச்சகர்களிடம் வழங்க கூடாது என, புதிய முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...