Tuesday, July 25, 2017

நிரம்பி வழியும் திருச்செந்தூர் ரயில்

பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
22:22

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி வழியாக, நாள்தோறும் சென்னை- - பொள்ளாச்சி எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்துார், மதுரை - பொள்ளாச்சி பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நிர்வாக காரணங்களால், மதுரை - பொள்ளாச்சி ரயில், ஒரு மாதத்திற்கும் மேலாக,
பழநியுடன் நிறுத்தப்படுகிறது.

இதனால், திருச்செந்துார் - பாலக்காடு ரயிலில் அமர இடம் கிடைக்காமல், நின்றபடியே, தென் மாவட்ட பயணியர் செல்கின்றனர். சமீபத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் மற்றும் பழநி கோவிலுக்கு சென்ற தென் மாவட்ட பயணியர், திருச்செந்துார் ரயிலில் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

எனவே, 'வழக்கம் போல், மதுரை- - பொள்ளாச்சி ரயில் சேவையை துவங்க வேண்டும். தற்போது, பொள்ளாச்சி- - கோவை ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால், கடந்த காலங்களில் இயங்கிய, கோவை - மதுரை- - ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். தென் மாவட்ட பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, பழநி வழியாக கூடுதலாக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...