திவ்ய தரிசன டோக்கன் இனி ஏழு நாளும் உண்டு
பதிவு செய்த நாள் 24 ஜூலை
2017
21:54
திருப்பதி: திருமலையில், வார இறுதி நாட்களில், 'திவ்ய தரிசன டோக்கன்கள்' வழங்குவதை, தேவஸ்தானம் மீண்டும் துவக்கி உள்ளது. திருப்பதி -- திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், விரைவாக ஏழுமலையானை தரிசிக்க, திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் முறையை, சில ஆண்டுகளுக்கு முன், தேவஸ்தானம் துவக்கியது. ஆனால், பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியதால், வார இறுதி நாட்களில், திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை, இரண்டு வாரங்களுக்கு முன், தேவஸ்தானம் ரத்து செய்தது. அதன்பின், வார நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை மட்டும், 20 ஆயிரம் (அலிபிரியில், 16 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டில், 4,000) திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனால், பாத யாத்திரை வந்த பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்குள், ஏழுமலையானை தரிசித்து வெளியேறினர். இந்நிலையில், கடந்த வாரம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சோதனை முறையில், 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போதும், பக்தர்கள் எவ்வித காத்திருப்பும் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில், சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.
எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது, மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. அதனால், இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும், பாத யாத்திரை பக்தர்கள், 20 ஆயிரம் பேருக்கு, திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment