Tuesday, July 25, 2017

பாஸ்போர்ட் பெற பான் கார்டு, ஆதார் போதும்'

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
01:42




புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.

பார்லிமென்டில், இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறும் முறையை எளிமையாக்கும் வகையில், பாஸ்போர்ட் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி - கல்லுாரி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுத்தால் போதும். அதே போல், திருமண சான்றிதழ், விவாகரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களும் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...