Wednesday, July 19, 2017

மதுரை டாக்டர்கள் குறித்து புகார் தெரிவிப்பவர்கள் 40 பேர்:மாதந்தோறும் அதிகரிக்கும் '104' அழைப்புகள்

பதிவு செய்த நாள்
ஜூலை 19,2017 01:53




மதுரை;மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முறையாக வராத டாக்டர்கள், சிகிச்சை குறைபாடுகள் குறித்து '104' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மாதந்தோறும் குறைந்தது 40 பேர் வரை புகார் செய்து தீர்வு காண்கின்றனர்.

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உட்பட 10 அரசு மருத்துவமனைகள், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் 'டாக்டர் இல்லை; நர்சுகளே சிகிச்சை அளிக்கின்றனர்' என புகார் வருகின்றன. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீது குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன.இதற்கு தீர்வு காண, சுகாதாரத்துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க, '104' என்ற இலவச போன் எண் வசதி கடந்த 2013ல் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில்,உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே. இதுகுறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், '104' ஐ அழைப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்தாண்டில் அதிகபட்சம் மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.

இச்சேவையை '108' ஆம்புலன்ஸ்களை நிர்வகிக்கும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் மேற்கொள்கிறது. இதன் மதுரை மேலாளர் ஜீவராஜ் கூறியதாவது: சிகிச்சையில் குறைபாடுமட்டுமின்றி, மனநலம் சார்ந்த ஆலோசனை, தேர்வு தோல்வியால் பாதித்த மாணவர்களுக்கு ஆலோசனை, ரத்த தானம், ரத்தம் தேவைப்படுவோர், உடலுறுப்பு தானம் செய்வோரும் '104'க்கு போன் செய்யலாம். குடிநீர் ஆதாரங்களில் விஷத்தன்மை இருந்தால் உடனுக்குடன் தெரிவித்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

தினமும் அழைப்பு

மதுரை மாவட்டத்தில் மாதந்தோறும் சராசரியாக 80 பேருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. 550 முதல் 600 பேர் வரைக்கும் அறிவுரைகளும், 20 முதல் 25 பேருக்கு மருத்துவம், சிகிச்சை தொடர்பான தகவல்களும் அளிக்கப்படுகின்றன. மேலும், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்த புகார்களை மாதம் குறைந்தது 40 பேர் வரை பதிவு செய்து தீர்வு காண்கின்றனர்.

No comments:

Post a Comment

Biryani has a ₹10,000-cr. market in T.N.

Biryani has a ₹10,000-cr. market in T.N. All-time hit: There are countless push-cart vendors serving biryani throughout the day and night, c...