Wednesday, July 19, 2017

திருப்போரூர் பகுதி தண்ணீர் லாரிகளுக்கு...கிராக்கி!அடுக்குமாடிகளில் தண்ணீர் பஞ்சத்தால் யோகம்

பதிவு செய்த நாள் 19 ஜூலை
2017
02:13

திருப்போரூர்;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக, லாரிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில், ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும், 100 - 1,000 வீடுகள் வரை உள்ளன.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வந்துள்ள பலருடன் உள்ளூர் வாசிகளும் அதிகளவில் வசிக்கின்றனர். இவ்வாறாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால், இக்குடியிருப்புகள் பலவற்றில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள முக்கிய பகுதிகளில், இங்குள்ள விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், லாரிகளின் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த தொழில், எளிதாகவும், நல்ல லாபகரமாகவும் உள்ளதால், சில ஆண்டுகளாக எவ்வித தடையும் இன்றி சிறப்பாக நடைபெறுகிறது. அதிலும் தற்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால், லாரி தண்ணீர் தொழில் சிறப்பாக உள்ளது.சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், திருப்போரூர் வட்டார பகுதியிலுள்ள தண்ணீர் லாரிகளின் உரிமையாளர்களை அணுகுகின்றனர். இதில், மூன்று ரகங்களாக தண்ணீர் லாரிகளை தரம் பிரித்து வைத்திருக்கும் உரிமையாளர்கள் அவற்றின் விலையை கூறும் போது தான், தண்ணீரின் அருமை நமக்கு புரிகிறது.

லாரிகள், 9,000, 12 ஆயிரம், 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் நிரப்பி கொண்டு சென்று, வினியோகிக்கப்படும் தண்ணீரின் விலை சில ஆயிரங்களை எட்டுகிறது.சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு லோடு தண்ணீர் வினியோகம் செய்தால் சில ஆயிரங்கள் மட்டும் கிடைக்கும் என்பதால், உள்ளூர்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பல லோடுகள் தண்ணீர் வினியோகம் செய்து, பல ஆயிரங்களை சம்பாதிப்பதை தான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் விரும்புகின்றனர்.

இந்நிலை, ஆண்டுக்கு ஆண்டு நீடித்தால் திருப்போரூர் சுற்று வட்டார பகுதிகளில் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் பலர் ஒவ்வொரு கோடைக்கும், இயற்கையை மூலதனமாக வைத்து, லட்சங்களை குவிப்பர் என்பதில் சந்தேகமே இல்லை என, சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

99% charge in EVM battery doesn’t impact counting: EC

99% charge in EVM battery doesn’t impact counting: EC Nisha.Nambiar@timesofindia.com 25.11.2024  Pune : Election commission (EC) has dismiss...